பொறியியல் கலந்தாய்வுக்கு முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று (மே 7) தொடக்கி வைத்தார்.
பொறியியல் படிப்புடன் அரசு கலை மற்றூம் அறிவியல் கல்லூர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்காக தனித்தனியாக வலைதளப் பக்கங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. இதில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்காக முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான..
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 06.06.2025
அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: 09.06.2025
ரேண்டம் எண் வெளியிடும் நாள்: 11.06.2025
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள்: 10.06.2025 முதல் 20.06.2025 வரை
தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 27.06.2025
தரவரிசை பட்டியலில் பிழை இருந்தால் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நாட்கள்: 28.06.2025 முதல் 02.07.2025 வரை
கலந்தாய்வு தொடங்கும் நாள் குறித்து ஏஐசிடிஇ நாள்காட்டியின்படி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.05.2025
Great insights on the role of video technology in education! I’d like to add that using a 4K PTZ camera for teaching can truly transform the classroom experience. The ultra-high-definition resolution ensures students don’t miss any detail, whether in a physical or virtual setting. Plus, the pan-tilt-zoom features offer flexible coverage — ideal for interactive lectures, demonstrations, and hybrid learning environments. It’s a smart investment for schools and institutions aiming to enhance their remote teaching quality and in-class engagement.
ReplyDelete