Monday, 16 March 2026

NCET

 NCET பற்றி தெரிந்து கொள்வோம்.


B.Sc,B.Ed Physics Chemistry Maths at 5 IITs and 6 NITs 


B.Sc,B.Ed or 

B.A,B.Ed or

B.Com,B.Ed at 


4 RIEs 

5 Central Universities and 

APU BENGALURU 


1. IIT KHARAGPUR WB

2. IIT BHUBANESWAR ODISHA 

3. IIT DHANBAD JHARKHAND 

4. IIT JODHPUR RAJASTHAN 

5. IIT ROPAR PUNJAB 


6 NITs


1. NIT TRICHY

2. NIT Calicut BSc BEd

3. NIT KOZHIKODE Preparatory BSc BEd

4. NIT TELANGANA WARANGAL 

5. NIT PUDUCHERRY KARAIKAL 

6. NIT TRIPURA

7. Dr.BR AMBEDKAR NIT BIDHIPUR JALANDHAR 


4 RIEs


1. Regional Institute of Education Mysuru 

2. Regional Institute of Education Bhuvaneshwar 

3. Regional Institute of Education Bhopal 

4. Regional Institute of Education Ajmeer Rajasthan 

5 Central Universities 


1. Coimbatore Avinashilingam Institute for women B.Sc,B.Ed & B.A,B.Ed 

2. Gandhigram Dindigul B.Sc,B.Ed 

3. Pondicherry University B.Sc,B.Ed & B.A,B.Ed

4. CENTRAL UNIVERSITY OF TAMIL NADU B.Sc,BEd

5. Central University of Tamil Nadu Neelakudi B.A,B.Ed 


And finally 


Azim Premji University Bengaluru B.Sc,B.Ed Biology 


Friday, 30 January 2026

இன்று ஒரு தகவல்

 இன்று 31.01.2026 சனிக்கிழமை


தமிழ்நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு படித்து வரும் சுமார் 4 லட்சம் அரசுப் பள்ளி குழந்தைகளில்


1000 சிறந்த அறிவார்ந்த குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து


அவர்கள்  கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை 


மாதம் ரூ.1000 வழங்கி ஊக்கப்படுத்திட


தமிழ்நாடு அரசால் நடத்தப்படும்


 *தமிழ்நாடு முதலமைச்சர் திறனறித் தேர்வு 2026* 


சற்று முன் தொடங்கியது. 👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐


9 ஆம் வகுப்பு படிக்கும் உங்கள் குழந்தையும்


அடுத்த ஆண்டு இந்த தேர்வை எழுத வேண்டு மெனில்


உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து விடுங்கள்.


அரசுப் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் சில.👇


👉 சுதந்திரமான கற்றல் சூழல்

👉 மகிழ்ச்சியான இயற்கை சூழல்

👉 விமானம் ஏறி வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்புகள்


 👉உங்கள் குழந்தை அரசு மாதிரிப் பள்ளிகளில் இடம் பிடிக்க வேண்டுமா ?


 👉IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உங்கள் குழந்தை படித்து வாழ்வில் உயர வேண்டுமா ?


அப்படியானால் உடனே உங்கள் குழந்தைகளை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்து விடுங்கள்.👍👍👍


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு


தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் 👇👇👇


1 முதல் 12 வகுப்பு வரை அனைத்து குழந்தைகளுக்குமான திட்டங்கள்👇👇👇


1. பாடப் புத்தகங்கள்

2. புத்தகப் பைகள்

3. பேருந்து பயண அட்டை

4. வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.75000 வைப்புத் தொகை (TN Power Finance Corpn. Ltd.FD)

5. விபத்து நிவாரணத் திட்டம்.


1 முதல் 10 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கான திட்டங்கள்👇👇👇


6. நோட்டு புத்தகங்கள்

7. காலணிகள் Shoes and Socks,

8. புரட்சித் தலைவர் MGR சத்துணவுத் திட்டம்.


11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும்👇👇👇


9. மிதிவண்டிகள்


10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும்👇👇👇


10. Special Cash Incentive Scheme


6 முதல் 10 வகுப்புகள் வரை 👇👇👇


11. தேச வரைபட புத்தகம். (Atlas)


6 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு மட்டும் 👇👇👇


12. Geometry Boxes. (Also for New Students in Class 7 and 8)


1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும் 👇👇👇


13. சீருடை 4 Sets.

14. woollen Sweaters (only for Hilly Regions)

15. Rain Coats Boots Socks (only for Hilly Regions)


1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டும்


16. CM Breakfast Scheme.

17. Crayon Class 1 & 2 & Colour Pencils class 3-5


👉👉1 முதல் 12 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றால் தமிழ்நாடு அரசுப்பணியில் 20% PSTM - Persons Studied Under Tamil Medium முன்னுரிமை.


👉👉6 - 12 வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு


BE MBBS BDS BVSc BFSC BSC Agri BALLB போன்ற தொழில் படிப்புகளில் 7.5 % இட ஒதுக்கீடு.


எந்த கல்லூரியில் சேர்ந்து படித்தாலும் மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் & தமிழ்ப்புதல்வன் திட்டம்.


👉👉👉 எட்டாம் வகுப்பில் NMMS தேர்வு எழுதும் வாய்ப்பு. தேர்ச்சி பெற்றாம் மாதம் ரூ.1000 உதவித் தொகை 4 ஆண்டுகளுக்கு.


👉👉9 ஆம் வகுப்பில் TRUST தேர்வு. வருடம் ரூ.1000 ஊக்கத் தொகை.


👉👉 10 ஆம் வகுப்பில் முதலமைச்சர் திறனறித் தேர்வு. தேர்ச்சி பெறும் 1000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை.


👉👉11 ஆம் வகுப்பில் தமிழ்த் திறனறித் தேர்வு. தேர்ச்சி பெறும் 1500 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத் தொகை.


👉👉 12 ஆம் வகுப்பில் "நான் முதல்வன் திட்டம் " மூலம்

CLAT UCEED NID NIFT JEE CUET NCET CEE NEET FDDI IMU -CET NFSU-NFAT IISER - IAT NISER-NEST NATA ISI CMI IPMAT JIPMAT NCHM - JEE AIIMS JIPMER NIMHANS ICI IITTM APU BITSAT AIISH NIEPMD MSE MSSW போன்ற போட்டித் தேர்வுகள் மூலம் குழந்தைகளை நாட்டின் தலை சிறந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பது.👍👍👍 பதிவு நாள் : 31.01.2026 சனிக்கிழமை மேலும் தகவல்களுக்கு 14417

Monday, 26 January 2026

அறிந்து கொள்வோம்

அறிந்து கொள்வோம்!!!

 CUET Exam Application Last Date 30.01.2026


only 3 days ahead🛑


5 Papers Selection.👇


👉 *For Maths Group* 

English / General Aptitude Test / Phy / Che and Maths.


👉 *For Biology Group* 

English / General Aptitude Test/ Phy / Che/ Biology


👉 *For Arts / Commerce / Humanities / Vocational Group Students* 


Accountancy/ Economics/ Tamil or History or Political Science or Agriculture 


 *முதல் 4 பாடங்களை மாற்றாமல் தேர்வு செய்வது நல்லது.* 


 *5 ஆவது பாடத்தை மட்டும் அவரவர் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம்* .


CUET SUBJECT SELECTION


 *For Maths Biology Group* 


If you like.... B.Tech... choose Physics Chemistry Maths 


If you like Agri Horticulture Fisheries sericulture Forestry 


Then choose Physics Chemistry Biology 


But


English and General Aptitude Test are must FOR ALL

Monday, 19 January 2026

பொதுத் தேர்வுகள் மார்ச் 2026

 10, 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2026


மொத்தம் தேர்வு எழுதுவோர்.🌳


12 ஆம் வகுப்பில் 8 லட்சத்து 7,000 பேர்


10 ஆம் வகுப்பில் 8 லட்சத்து 70,000 பேர்


செய்முறைத் தேர்வுகள் - தேதி அறிவிப்பு


12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள்

பிப்ரவரி 9 to 14


+ 1 Practicals

பிப்ரவரி 16-21


10 ஆம் வகுப்பு செய்துறைத் தேர்வுகள் பிப்.23 to 28


பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள்


12 ஆம் வகுப்புக்கு

மார்ச் 02 to 26


11 ஆம் வகுப்பிற்கு

மார்ச் 03 to 27

( மார்ச் 2018 முதல் ஜூன் 2025 வரை நடைபெற்ற +1 பொதுத் தேர்வுகளில் Fail ஆனவர்களுக்கு மட்டும் )


*10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மார்ச் 11- ஏப்ரல் - 6*


*தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் - Result Dates*


*12 th Result on 08.05.26*

*10th Result on  20.05.26*

Thursday, 8 January 2026

உங்களுக்குத் தெரியுமா?

 உங்களுக்குத் தெரியுமா?


கீழ்கண்ட 5 படிப்புகளில் மட்டும் தான் 7.5 கோட்டா Free Seats உண்டு.

1. Medicine

2. Engineering

3. Agri

4. Fisheries

5. Law


Para medical படிப்புகளில் 7.5 கோட்டா Free Seats கிடையாது.🛑


MBBS சுமார் 450 seats

BDS சுமார் 220 Seats

AYUSH சுமார் 150 Seats

Total NEET தேர்வு மூலம் மருத்துவ படிப்பில் மட்டும் சுமார் 820 Free Seats☝️


மிக அதிக அளவில் BE படிப்பில் மட்டும் சுமார் 14000 Seats

(only For Maths Group)


Agri சுமார் 350 seats

B.V.Sc. 42 Seats only

B.Tech 12 Seats only

B.F.Sc 8 Seats only


For Arts Group Students👇

BBA only one Seat

SOEL Law 36 Seats

Law Colleges 107 Seats


மேற்காண் சுமார் 15000 Free Seats ல் உங்களுக்கு ஒரு இடம் வேண்டுமெனில்


தமிழ் & ஆங்கிலம் தவிர பிற 4 பாடங்கள் ஒவ்வொன்றிலும் 96 மதிப்பெண்கள் பெற வேண்டும்.


BE Free Seats மட்டும் மிக அதிக அளவில் உள்ளதால் Phy Che Maths தலா 75 மதிப்பெண் இருந்தால் 7.5 கோட்டாவில் Free Seats கிடைக்க வாய்ப்பு உண்டு.


No College Fees. No Hostel fees.


அப்பா அம்மாவிற்கு சிரமம் கொடுக்காமல் அரசு உதவியுடன் படித்து வாழ்வில் வெற்றி பெற


இன்றில் இருந்து திட்டமிட்டு


உங்கள் நண்பர்கள் தூங்கும் போது


அதிகாலை 4 மணிக்கு எழுந்து படியுங்கள்.👍


வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.💐💐💐


Saturday, 27 December 2025

 தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி குழந்தைகளை


தைவான் மலேசியா அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும்


இந்திய நாட்டின் முதன்மைச் கல்வி நிறுவனங்களான


23 IITs 31 NITs 26 IIITs 3 SPA 6 IMUs 25 NLUs 5 NIDs 6 NIFTs 10 ICAR Agri Universities 6 NFSUs 7 IISERs one NISER AIIMS JIPMER NIMHANS


IIM-Rohtak

IIM-Indore & Amritsar

IIM - Budhgaya&Jammu


Indian Statistical institute 

Madras School of Economics 

Tata institute of social sciences 

Regional Institute of Education Mysore 

IHM CHENNAI 

SIHM TRICHY 

IITTM NOIDA GWALIOR 


போன்ற இந்தியாவின் Top 217 PREMIER INSTITUTE களிலும் இடம் பிடிக்க பட்டை தீட்டும் பட்டறையாக


மாநிலத் தலைநகர் சென்னையில் ஒரு தகைசால் பள்ளியினையும்


மாவட்டத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளி என 38 மாவட்டங்களில் அரசு மாதிரிப் பள்ளிகளையும்


கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடத்தி வரும் தமிழ்நாடு அரசு....


படிப்படியாக ஒவ்வொரு மாதிரிப் பள்ளிக்கும்


பன்மாடி விடுதிக் கட்டடங்களையும்


புதிய அதி நவீன Digital தொழில் நுட்ப வகுப்பறைகளையும்


கற்றலை எளிதாகக்கவும் இனி தாக்கவும்... Hi Speed Internet வசதி கொண்டு கணினி ஆய்வகங்களையும் நிறுவி 


தமிழ்நாட்டு அரசுப் பள்ளி குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வருகிறது. 


 வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...


Wednesday, 17 December 2025

அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் மறக்காமல் விண்ணப்பம் செய்யுங்கள்.

 அரசுப் பள்ளியில் +2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கான 


👉 உங்களுக்கு தெரியுமா?


👉 கீழ்காண் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று Counselling கலந்து கொண்டு இடம் கிடைத்தால்


👉 தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படிக்க முடியும்.


👉 அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் மறக்காமல் விண்ணப்பம் செய்யுங்கள்.


👉 NIFT தேர்வு எழுதுங்கள். All Group eligible. Arts Commerce Humanities மாணவ மாணவிகளும் NIFT கல்லூரிகளில் B.Des படிக்க முடியும். Maths Group குழந்தைகள் B.F.Tech & B.Des இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பம் செய்வது நல்லது. கடைசி தேதி 06.01.2026 Fees SC ST PWD குழந்தைகளுக்கு ரூ.750 மற்ற OBC குழந்தைகளுக்கு ரூ.3000


👉BC MBC DNC BCM குழந்தைகள் உடனே இ-சேவை மையம் சென்று OBC NCL சான்றுக்கு விண்ணப்பிக்கவும்.


👉 NIFT விண்ணப்பத்தில் மறக்காமல் OBC NCL என குறிப்பிடவும்.


👉 NEET JEE CUET NIFT ஆகிய 4 தேர்வுகளை மட்டும் தமிழில் எழுத முடியும். ஆகவே தவறாமல் இந்த 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்து விடுங்கள். விண்ணப்பம் ஜனவரி 2026ல் open ஆகும்.


👉NCHM JEE தேர்வு எழுதினால் திருச்சி துவாக்குடி SIHM ல் 3 வருடம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படிக்க முடியும்.👍 விண்ணப்பம் ஜனவரி 2026ல் Open ஆகும்.


👉 IITTM தேர்வு எழுதினால் டெல்லி & குவாலியரில் BBA Tourism படிக்க முடியும்.💐 விண்ணப்பம் ஏப்ரல் 2026ல் open ஆகும்.


👉 +2 ல் 550 மதிப்பெண் எடுத்தால் போதும். எந்த தேர்வும் இல்லாமல் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் Indian Maritime University சென்னை கொச்சின் விசாகப்பட்டிணத்தில் 3 வருட BBA படிக்க முடியும்.


👉+2ல் 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு மிக மிக எளிதாக நீங்கள் விரும்பும் படிப்பில் 7.5 கோட்டா Free Seats கிடைக்கும். No College Fees. No Hostel Fees.👍👍👍💐💐💐💐


👉 பெரிதினும் பெரிது கேள் - பாரதியார்.


👉 அரையாண்டு தேர்வை சிறப்பாக எழுதுங்கள்.


👉 உங்களுக்கு தோள் கொடுக்கவும்.... துணை நிற்கவும்....


தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின்


நான் முதல்வன் திட்டம் தயாராக உள்ளது.👍👍👍💐💐💐💐


மேலும் விபரங்களுக்கு சுழற்றுக 14417

Tuesday, 18 November 2025

Thursday, 30 October 2025

உங்களுக்குத் தெரியுமா?

 உங்களுக்குத் தெரியுமா? 


அரசுப் பள்ளிகளில் இந்த வருடம் 2025ல் தற்போது +2 படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டல் தொடர் - அடுத்த வருடம் எந்த கல்லூரியில் சேரலாம் ? எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்? என்ன பாடம் படிக்கலாம் ? : 


 *நீங்கள் தற்போது தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் +2 படிக்கிறீர்களா?* 


உங்களுக்கு 7.5 கோட்டா இருக்கிறதா ?


அதாவது அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்துள்ளீர்களா?


அவ்வாறு 6 - 12 அரசுப் பள்ளிகளில் நீங்கள் படித்திருந்தால் ....


உங்களுக்கு 7.5 கோட்டா உண்டு.


7.5 கோட்டா குழந்தைகள் கீழ்காண் 5 விதமான படிப்புகளை மட்டும் No college fees...No hostel fees கட்டாமல் படிக்க முடியும்.


என்னென்ன படிப்புகள் 7.5 கோட்டாவில் Free ஆக படிக்க முடியும்? எத்தனை Seats உள்ளது? +2 ல் எவ்வளவு மார்க் இருந்தால் 7.5 கோட்டா சீட் கிடைக்கும் ?


7.5 கோட்டாவில் வரும் 6 படிப்புகள் யாவை?


👉MBBS BDS BSMS BHMS BUMS BAMS - சுமார் 800 seats. Only through NEET Marks 450 க்கு மேல் தேவை.


  👉BE- சுமார் 14000 Seats Phy 80 Che 80 Maths 80 கட்டாயம் தேவை.


👉BVSc - only 44 Seats. Phy 99 Che 99 Bio 99 கட்டாயம் தேவை. ஆண்டு கட்டணம் மிக மிக குறைவு. ஆகவே Non 7.5 கோட்டாவில் மீதமுள்ள 540 Seats ல் இடம் கிடைத்தால் கூட சேர்ந்து படிப்பது சிறந்தது.👌👌👌👌


 👉BSc Agri & BFSc- சுமார் 350 seats. Phy 85 Che 85 Bio 85 and 4th Sub 85 கட்டாயம் தேவை.


👉 B.Tech in Agri Fisheries & Dairy & Food Technology & BBA சுமார் 16 Seats only Phy 75 Che 75 Maths 75 Bio 75 தேவை.


👉5 வருட சட்டப்படிப்பு Law. சுமார் 140 seats. தமிழ் ஆங்கிலம் தவிர பிற 4 பாட மொத்த மதிப்பெண்கள் 388 க்கு மேல் இருந்தால் Law College 7.5 கோட்டா சீட் உறுதியாக கிடைக்கும். தமிழ்நாட்டில் சட்டம் படிக்க 15 அரசு சட்டக் கல்லூரிகளிலும் மிகக் குறைந்த கட்டணமே. Annual Law college fees Rs.1000 only. ஆகவே 7.5 கோட்டா சீட் கிடைக்காவிட்டாலும் சட்டம் படிக்கலாம்.👍 


மேற்கண்டவாறு 7.5 கோட்டா Free Seats இடங்களை பிடிக்க அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் சிரமம் உள்ள குழந்தைகளும் ....


தமிழ்நாட்டிற்கு வெளியில் பிற மாநிலங்களுக்கு சென்று


"நான் முதல்வன் திட்டத்தின் கீழ்" படிக்க விரும்பும் குழந்தைகள் கீழ் காண் நீண்ட கட்டுரைக்கு நேரம் ஒதுக்கவும்.


"புதிய வாசல் திறக்கும். புதிய பாதை பிறக்கும். புரிய பயணம் சிறக்கும். "


வாழ்த்துகள்💐💐💐


கீழ்காண் 27 வகையான போட்டித் தேர்வுகளில் ...


 உங்களுக்கு மிகவும் பிடித்த 3 அல்லது 4 துறைகளை தேர்வு செய்து 


அதற்குரிய தேர்வுகளுக்கு உரிய நேரத்தில் விண்ணப்பித்து


 தேர்வு எழுதி Online Counselling ல் கலந்து கொண்டு 


கீழ்காண் 217 கல்லூரிகளில் இடம் பிடித்தால் .....👍👍👍


 *நான் முதல்வன் திட்டம் உங்களுக்கு கை கொடுக்கும்.* 👍👍👍


அந்த 217 கல்லூரிகள் எவை? எவை? 


அந்த 27 தேர்வுகள் எவை ? எவை?


 + 2 ல் எந்த Group மாணவர்கள் எந்த தேர்வை எழுத முடியும் ?👇👇👇


 *விரிவான விபரம் தேவைப்படுவோர் மட்டும் கீழே உள்ள நீண்ட கட்டுரையினை வாசிக்கவும்.* 


 *+2 கணிதப் பிரிவு குழந்தைகளுக்கான தேர்வுகள் - 9👇👇👇* 


👉JEE 90 colleges 

IMU 6 colleges 

NATA- Anna University 

IPMAT Indore Amritsar 

IPMAT Rohtak 

NTA-JIPMAT Bodh Gaya 

IIM- IPM - 5 Colleges 

ISI 1 MSE 1 NCET 3

= 9 Exams 106 Colleges


 *+2 Biology பிரிவு குழந்தைகளுக்கான தேர்வுகள் - 8👇👇👇* 


 👉CUET-ICAR 9 colleges 

AllMS 26 colleges JIPMER 1

 NIMHANS 1

 NISER 2

 IISER 7 colleges 

NEET 1 

BITS-SAT B.Pharm 1

= 8 Exams 48 colleges.


 *+2 படிக்கும் அனைத்து Group குழந்தைகளும் எழுதக் கூடிய 10 தேர்வுகள்👇👇👇* 


 👉CLAT 25 colleges CUET-DU BHU JMI TISS NFSU 6 

RIE Mysore 1

NID 7 

NIFT 6

 IIT-UCEED 7

 NCHM-JEE 4

 IITTM 2 Noida & Gwalior 

APU 2 Bengaluru Bhopal 

= 10 Exams 63 colleges 


 *Grand total* 

 *27 Exams* 

 *217 Colleges* 


 *மேற்காண் 217 கல்லூரிகளில் அட்மிசன் பெற ஒரு குழந்தை எழுத வேண்டிய தேர்வுகள் எண்ணிக்கை - 27* 


👉 *தேர்வு - 1 JEE* 


 Engineering படிக்க விரும்பும் குழந்தைகள் மட்டும் வாசிக்கவும் 👇👇👇 JEE (Phy Che Maths Students only)


👉JEE என்ற ஒரே தேர்வின் மூலம் கீழ் காண் 90 கல்லூரிகளில் B.Tech or B.Arch or B.Plan or ISI - BSDS - Data Science படிக்க முடியும்.👇👇


IITs-23 

NITs-31+1

IIITs-26 


SPA-3 New Delhi Bhopal & Vijayawada 


NIFTEM-2 Tanjore & Haryana (Kundli) 25 kms from New Delhi 


IISc Bengalore -1 

IIST-Trivandram-1

RGIPT-Jais,Amethi-UP-1


ISI - Bengalore BSDS - 1


👉மேற்காண் 90 கல்லூரிகளில் உள்ள சுமார் 52000 B.Tech or B.Arch or B.Plan or M.Tech or MSc இடங்களில் Admission பெற JEE ஒரு தேர்வு போதும். ஆனால் +2 ல் 450/600 மதிப்பெண் அவசியம். SC ST PWD குழந்தைகளுக்கு 390/600 போதும்.


👉JEE தேர்வு ஜனவரி 2026 & ஏப்ரல் 2026 என வருடத்திற்கு 2 முறை தேர்வு நடைபெறும். ஒருவர் 2 முறையும் தேர்வு எழுதலாம். எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கிறோமோ அந்த அதிக மதிப்பெண் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.


👉 ஆகவே ஒவ்வொரு மாணவரும் மாணவியும் ஜனவரி & ஏப்ரல் 2026 ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதும் & தேர்வு எழுதுவதும் நல்லது.👌👌👌  


👉 JEE Mains தேர்வில் 99 Percentile க்கு மேல் எடுத்தால் தான் .... திருச்சி NIT யில் B.Tech Civil or Chemical or Material Science or Production கிடைக்கும்.


👉 ஆனால் 30 percentile எடுத்தாலும் இந்தியாவில் உள்ள சுமார் 127 மத்திய அரசு கல்லூரிகளில் ஏதாவது ஒரு சிறந்த மத்திய அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும்.👍👍👍


👉 ஆகவே தவறாமல் JEE Mains க்கு விண்ணப்பிக்கவும்.


👉JEE Mains தேர்வில் Paper 1 & Paper 2A & Paper 2B என மொத்தம் 3 Papers உண்டு. 


👉B.Tech மட்டும் படிக்க Paper-1 எழுதினால் போதும்.


👉B.Arch படிக்க Paper2A க்கும் விண்ணப்பிக்க வேண்டும். 


 👉B.Plan படிக்க விரும்புவோர் Paper 2B ஐ தேர்வு செய்ய வேண்டும்.


👉3 Paper-களையும் தேர்வு செய்து .... தேர்வு கட்டணம் செலுத்தி...

ஜனவரி 2026 & ஏப்ரல் 2026 ஆகிய 2 முறையும் 3 Papers தேர்வுகளையும் எழுதுவது சிறந்தது.👌👌👌


👉 2025 JEE தேர்வு மூலம் Premier கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் விபரம்👇👇👇


IITs 20 students 

NITs 28 students 

IIITs 11

IISC 2

IIST 4

RGIPT 15

SPA 19

NIFTEM 16

IIEST 2

Total JEE 117 Students👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐 


👉 *தேர்வு - 2 IMU-CET* 


கடல் அலைகளோடு கைகோர்த்து Marine Engineering படிக்க விரும்பும் குழந்தைகள் மட்டும் வாசிக்கவும்.👇👇👇


 IMU - CET (Phy Che Maths Group )


Chennai Vishakapatnam Kolkata Kochi Mumbai & Navi Mumbai ஆகிய 6 ஊர்களில் உள்ள INDIAN MARITIME UNIVERSITY களில் 


4 வருட B.Tech Marine Engineering


3 வருட BSc Nautical Science


1 வருட DNS எனப்படும் Diploma in Nautical science 


ஆகிய படிப்புகளை படிக்க முடியும்.


IMU CET மூலம் Admission பெற +2 Phy Che & Maths பாடங்களில் 60% மதிப்பெண் அவசியம். மேலும் +2 English பாடத்தில் 50% அவசியம்.


நான் முதல்வன் திட்டத்தில் 2025 ல் IMU சேர்ந்துள்ள அரசுப்பள்ளி குழந்தைகள் 174 பேர்👏👏👏👏👍👍👍👍💐💐💐💐


👉 *தேர்வு - 3* 

 *NATA* Architecture - கட்டடக் கலை படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு.


NATA - National Aptitude Test in Architecture ஆண்டுக்கு 3 முறை நடக்கும். பெரும்பாலும் May மாதம் NATA தேர்வு நடைபெறும். 3 முறையும் ஒருவர் தேர்வு எழுதலாம். Best of 3 will be your final Score. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் B.Arch படிக்க NATA Score Card அவசியம்.


  👉 *தேர்வு - 4 IPMAT-I* MBA படிக்க. Only for +2 Maths students.


👉 கீழ்காண் IPMAT & JIPMAT தேர்வுகள்


 Indian Institute of Management - 

IIM INDORE 

IIM AMRITSAR

 IIM ROHTAK

 IIM BODH GAYA

 IIM JAMMU ஆகிய 5 கல்லூரிகளில் 5 வருட IPM = MBA படிக்க நடத்தப்படும் தேர்வுகள். சற்று கடினமானவை. 


10 & 12 ஆம் வகுப்பில் 80% மேல் மதிப்பெண் வைத்துள்ள மாணவ மாணவிகள் மட்டும் விண்ணப்பம் செய்வது நல்லது.👌👌👌👍👍👍


IIM Indore நடத்தும் IPMAT


👉 *தேர்வு - 5 IPMAT-R*

 IIM Rohtak நடத்தும் IPMAT மூலம் MBA படிக்க.


👉 *தேர்வு - 6 NTA-JIPMAT* 

NTA நடத்தும் JIPMAT தேர்வின் மூலம் MBA படிக்க.


👉 *தேர்வு - 7 ISI* 

கணிதம் & புள்ளியியல் துறையில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு.


ISI - Indian Statistical institute Kolkata வில்

B.Stat & B.Math படிக்கலாம். கட்டணம் ஏதுமில்லை. மாதா மாதம் உதவித் தொகை பெற்றுக் கொண்டே படிக்கலாம். *தமிழ்நாடு அரசுப் பள்ளி குழந்தைகள் இருவர் 2025 ல் Indian Statistical institute ல் இடம் பிடித்துள்ளனர்.* தற்போது ISI யில் படித்து வருகிறார்கள்👏👏👏👏💐💐💐💐


 👉 *தேர்வு - 8 MSE*


பொருளியல் படிக்க விரும்பும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு. 


MSE- Madras School of Economics,Chennai 

MA - Economics -only for Maths group students.


அரசுப்பள்ளி குழந்தைகள் 15 பேர் 2025ல் MSE ல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.👏👏👏👏💐💐💐💐


*தேர்வு - 9 NCET - BEd* IIT & NIT களில் BEd படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு.


IIT காரக்பூர் & NIT திருச்சி & வாரங்கல் ஆகிய 3 கல்லூரிகளில் BSc BEd படித்து சிறந்த ஆசிரியர் ஆக எதிர் காலத்தில் மிளிர கனவு காணும் குழந்தைகள் அனைவரும் NCET தேர்வு எழுதலாம். NCET தேர்வில் 7 பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். 

1. Physics or Economics 

2. Chemistry or Accountancy 

3. Mathematics or Biology or Business studies 

4. General Aptitude 

5. Teaching Aptitude

6. Tamil 

7. English


👉 *தேர்வு 10 CUET* *ICAR* விவசாய அறிவியல் படிப்பில் நாட்டம் உள்ளவர்களுக்கு.


CUET தேர்வில் ஒருவர் 5 பாடங்களை தேர்வு செய்யலாம்.


1. English

2. General Aptitude

3. Physics or Economics 

4. Chemistry or Accountancy 

5. Maths or Biology or computer science 


CUET தேர்வில் மேற்காண் Phy Che Maths or Bio எழுதிய குழந்தைகள் .... +2 ல் Phy Che Bio or Maths படித்திருந்தால் .... ICAR- Indian council for Agricultural Research நடத்தும் Online Counselling ல் கலந்து கொண்டு 13 வகையான விவசாய படிப்புகளை ICAR வழங்கும் மாதம் ரூ.3000 உதவித் தொகை பெற்றுக் கொண்டு படிக்கலாம்.👍👍👍 இந்த வருடம் 2025 ICAR Online Counselling கடந்த வாரம் 14.10.2025 அன்று தொடங்கியது. அடுத்த மாதம் 19.11.2025 நிறைவு பெறுகிறது.


👉 *தேர்வு - 11 AIIMS Nursing & PARAMEDICAL* துணை மருத்துவப் படிப்புகளில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு.


ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES - நாடு முழுவதும் உள்ள 26 AIIMS மருத்துவக் கல்லூரிகளில் Nursing & Para Medical Degrees படிக்கலாம்.


👉 *தேர்வு - 12 NEET- JIPMER PARAMEDICAL* 


துணை மருத்துவப் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு


JIPMER-Pondicherry யில் NEET மதிப்பெண் அடிப்படையில் Nursing & Para Medical படிக்கலாம்.

Total Seats 195 only.


 *NEET மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவர் படிப்பு.👇👇👇* 


VCI - Veterinary Council of India - B.V.Sc - All India Quota Seats - NEET மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும். ஆகவே அவசியம் NEET எழுதவும்.👍


👉 *தேர்வு - 13* 

 *NIMHANS* - *PARAMEDICAL* 


துணை மருத்துவப் படிப்பில் ஈடுபாடு உள்ள குழந்தைகளுக்கு.


NIMHANS -Bengaluru - Nursing & Para Medical 

Total All India Quota. *Just 45 Seats only* 🛑 அந்த 45 இடங்களில் தமிழ்நாடு அரசுப் பள்ளி குழந்தைகள் 4 இடங்களை இந்த ஆண்டு 2025ல் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 👏👏👏👏💐💐💐💐


👉 Biology படிக்காமல் Phy Che Maths மட்டும் படிக்கும் மாணவர்களும் AIIMS and NIMHANS PARAMEDICAL தேர்வுகளை எழுதலாம்.


👉 *தேர்வு 14 IISER - IAT* அடிப்படை அறிவியலில் நிறைய கேள்விகள் கேட்கும் ..... தேடல் உள்ள குழந்தைகளுக்கு ....

ஏற்ற Research படிப்புகள்.👇👇👇👇


No Medicine 

No Engineering 

No Law

No Design 

No Marine Engineering 

No Agriculture 

No Architecture

No social sciences 


"My Dream and Passion is to study basic sciences like Physics Chemistry Biology Maths and Economics."


Then your choice of exam must be IISER IAT 


Indian Institute of Science Education and Research -IISER 


IAT- IISER APTITUDE TEST.👇👇👇


IISER - Pune, Kolkata, Mohali, Trivandrum, Tirupati, Bhopal, Berhampur. ஆகிய 7 கல்லூரிகளில் படிக்க விரும்புவோர் IISER - IAT தேர்வு எழுதலாம்.

IISER - IAT தேர்வின் மூலம் சென்னை IIT யிலும் படிக்க முடியும்.


2025ல் IISER ல் இடம் பிடித்து சாதித்துள்ள அரசுப் பள்ளி குழந்தைகள் 18 பேர்.👌👌👌👌👍👍👍👍


👉 *தேர்வு - 15 NISER-NEST* 


அறிவியல் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு


Physics Chemistry Maths Biology & Economics போன்ற அடிப்படை அறிவியல் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கான தேர்வு.


👉 NISER -ல் கல்விக் கட்டணம் கிடையாது.


👉 மாதம் ரூ.5000 உதவித் தொகை பெற்றுக் கொண்டே படிக்கலாம். 


👉 NISER புவனேஸ்வர் & மும்பை பல்கலைக் கழகம் DAE - CEBS ஆகிய இரண்டு கல்லூரிகளிலும் சேர்த்து 250 இடங்கள் மட்டுமே உள்ளன. தேர்வு சற்று கடினமான இருக்கும். 10th & 12th ல் 80% க்கு மேல் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பம் செய்வது நல்லது.


*தேர்வு - 16 NEET* - B.Tech Food Technolgy at NIFTEM KUNDLI Sonepat HARYANA 25 KMs from Delhi 


உணவு தொழில் நுட்பத்தில் நிபுணர் ஆக விரும்பும் குழந்தைகளுக்கு☝️☝️☝️☝️


 👉 *தேர்வு* - *17 BITS* *PILANI** - BITS - SAT (B.Pharm ) 2025 ல் அரசுப் பள்ளி குழந்தைகள் 3 பேர் BITS ல் சேர்க்கை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.👍👍👍👏👏👏💐💐💐


மருந்து தயாரித்தலில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு☝️☝️☝️


👉 *தேர்வு - 18 NLU-CLAT* 


வழக்கறிஞர் அல்லது நீதியரசர் ஆக விரும்பும் குழந்தைகளுக்கு.


NLU எனப்படும் National Law University களில் June 2026 ல் சட்டம் படிக்க விரும்பும் குழந்தைகள் வருகிற 07.12.2025 அன்று நடைபெற உள்ள CLAT தேர்வை எழுத வேண்டும். CLAT application last date 31.10.2025 only 10 days ahead 🛑🛑🛑 Don't miss. CLAT FEES RS.4000 FOR SC ST PWD Rs.3500 Previous year Question papers Rs.500.


திருச்சி NLU உள்பட 25 NLU களில் சுமார் 2500 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60000 பேர் CLAT தேர்வில் போட்டி இடுகின்றனர். 10th ஆங்கில பாடத்தில் 80% மதிப்பெண் எடுத்த குழந்தைகள் அவசியம் CLAT தேர்வு எழுதுவது சிறந்தது.


இந்த 2025ல் அரசுப் பள்ளிகளில் இருந்து NLU களில் இடம் பிடித்த சாதனை குழந்தைகள் 16 பேர். 👌👌👌👍👍👍


👉 *தேர்வு - 19 CUET* 


CUET- COMMON UNIVERSITY ENTRANCE TEST 


என்ன படிப்பது என முடிவெடுக்காமல் உள்ள குழந்தைகளுக்கு CUET ஒரு சிறந்த தேர்வு.

(For All Group Students)


CUET ஒரு தேர்வு போதும். நாடு முழுவதும் உள்ள சுமார் 44 மத்திய அரசு பல்கலைக் கழகங்கள் உள்பட


 சுமார் 200 க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் 


சுமார் 2 லட்சம் UG மற்றும் Integrated PG படிப்புகளில்


B.Tech & Law & Agri & Design & MBA & MSC என நீங்கள் விரும்பும் எந்த படிப்பையும்


குறைந்த செலவில்

தரமான பல்கலைக் கழகங்களில் சென்று படிக்க CUET ஒரு சர்வ ரோக நிவாரணி போன்ற ஒரு அற்புதத் தேர்வு 👍


CUET - தேர்வில் English and General Aptitude Test ஆகிய 2 தேர்வுகள் மட்டும் எழுதினால் போதும்.


TISS Mumbai யில் BA Social work & social sciences and BS ANALYTICS AND SUSTAINABILITY STUDIES படிக்கலாம்.👍


👉 2025 ல் அரசுப் பள்ளி குழந்தைகள் 27 பேர் Tata institute of social sciences -TISS ல் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர்👍👍👍👏👏👏👏💐💐💐💐


 👉CUET தேர்வில் Phy Che Bio தேர்வுகள் எழுதினால் ICAR Agri படிக்கலாம்.


 👉CUET தேர்வில் Phy Che Maths எழுதினால் ICAR - ல் B.Tech 

Dairy Technology 

Food Technology 

Bio Technology 

Agri. Engineering

படிக்கலாம்.


CUET - ICAR கல்லூரிகள் - 9


CUET தேர்வில் ஒரு மாணவர் 5 பாடங்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.


ஆகவே English & General Aptitude Test ஆகிய 2 பாடங்களை தேர்வு செய்த பிறகு


நீங்கள் +2 ல் படித்த .... உங்களுக்கு மிகவும் பிடித்த ....


ஏதேனும் 3 பாடங்களை தேர்வு செய்து CUET 2026 தேர்வை எழுதுவது நல்லது.


For Example:


Eng GT Phy Che Bio


or


Eng GT Phy Che Maths


or


Eng GT Accountancy Economics History 


or 


Eng GT Political science Tamil and Geography 


 என +2ல் நீங்கள் படித்த .... உங்களுக்கு மிகவும் பிடித்த ஏதேனும் 3 பாடங்களோடு Engish & General Test ஐயும் சேர்ந்து 5 பாடங்களை CUET தேர்வில் தேர்வு செய்து தேர்வு எழுதவும்.. 


 👉Engineering Data Science Law Agriculture Journalism Foreign Languages Social sciences B.Ed என எதுவும் படிக்க.... எல்லாம் படிக்க.... எங்கும் படிக்க...CUET - ஒரு தேர்வு நிச்சயம் கை கொடுக்கும். அவசியம் CUET தேர்வை எழுதுங்கள்.👍👍👍


அடுத்த பெரிய துறை Designing.🛑🛑🛑👇👇👇


👉Creative thinking கொண்டுள்ள


 Design துறையில் ஆர்வமுள்ள 


Drawing skill அதிகமுள்ள


4 வருட B.Des படிக்க விரும்பும் உள்ள 


Arts & Commerce & Humanities & Maths & Biology என அனைத்து Group குழந்தைகளும்


IIT யில் படிக்கலாம்.👍👍👍


கீழ் காண் IIT- UCEED, NID- DAT & NIFT தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


*தேர்வு - 20 IIT - UCEED* 245 Seats only


IIT களில் Design படிப்புகள் படிக்க 

UCEED Last Date 31.10.25 இன்னும் 10 நாள்களே உள்ளன.🛑🛑🛑 UCEED APPLICATION FEES RS.4000 and for ALL community GIRLS and for SC ST PWD STUDENTS ONLY Rs.2000👌👌👌


👉 *தேர்வு - 21 NID- DAT* 


 NID-National Institute of Design கல்லூரிகள் அமைந்துள்ள

Ahmedabad, Gandhinagar, Bengaluru, Vijayawada, Bhopal, Kurukshetra, Jorhat-Assam ஆகிய கல்லூரிகளில் B.Des படிக்க NID - DAT- Design Aptitude Test எழுத வேண்டும். 

NID - DAT Exam Date : 21.12.2025


Application fees for all Rs.4000.


👉 *தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இருந்து NID யில் சேர்க்கை கணக்கை தொடங்கி உள்ள *முதல் மாணவர் & ஒரே மாணவர்....* *வணிகவியல் பிரிவு மாணவர்....* 


 *திரு. வெற்றித் தமிழ் அவர்கள்.* 👌👌👌👌👍👍👍👏👏👏👏💐💐💐💐


 👉 *தேர்வு - 22 NIFT* 


 Design துறையில் ஆர்வமுள்ள குழந்தைகள் Chennai Delhi Kolkata Bombay Bengaluru Hyderabad ஆகிய 6 NIFT கல்லூரிகளில் B.Des படிக்கலாம். B.Des. Fees. ரூ.3000 


B.F.Tech (only for Maths Group students) Fees Rs.1500


NIFT ல் B.Des & B.F.Tech படிக்க விரும்புவோர் தயாராக இருக்கவும். தேர்வு பிப்ரவரி 2026 ல் நடைபெறும். Application இன்னும் 20 நாள்களில் open ஆகி விடும்.👍👍👍


2025ல் NIFT ல் இடம் பிடித்த அரசுப் பள்ளி குழந்தைகள் 62 பேர்.👌👌👌👍👍👍👏👏👏👏💐💐💐💐


 👉 *தேர்வு - 23 NFSU-NFAT* தடய அறிவியல் துறையில் புலனாய்வுத் துறையில் cyber security துறையில் ஆர்வமுள்ள குழந்தைகள் எழுத வேண்டிய தேர்வு.


NFAT- National Forensic Aptitude Test மூலம்

NFSU - National Forensic Science University யில் M.Tech Cyber Security & MSc Forensic Science & MBA படிக்கலாம்.


NFSU வில் 2025ல் சேர்க்கை பெற்று பெருமை சேர்த்துள்ள தமிழ்நாடு அரசுப் பள்ளி குழந்தைகள் 17 பேர்.👌👌👌👍👍👍👏👏👏💐💐💐

 

👉 *தேர்வு-24* 

 *NCERT* *RIE* - *CEE* - *B.Ed* எதிர் காலத்தில் ஆசிரியராக மலர விரும்புவோருக்கு.


Regional Institute of Education MYSORE ல் 4 year BA B.Ed & BSc BEd & 6 year MSc BEd - படித்து ஆசிரியராக விரும்புவோர் CEE Exam எழுத வேண்டும்.


👉 *தேர்வு - 25 NCHM-JEE* B.Sc Hotel Management படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு.


NCHM JEE தேர்வு மூலம் IHM- CHENNAI NEW DELHI MUMBAI and SIHM TRICHY ஆகிய 4 கல்லூரிகளில் BSc Hospitality and Hotel Administration படிக்கலாம்.


2025ல் IHM ல் இடம் பிடித்துள்ள அரசுப் பள்ளி குழந்தைகள் 102 பேர் 👏👏👏👏👍👍👍👍💐💐💐💐


 👉 *தேர்வு 26 IITTM - BBA Tourism* ஊர் சுற்றுதல் ... வரலாறு அறிதல்.... பழமையை கொண்டாடுதலில் ஆர்வம்.... உள்ள குழந்தைகளுக்கு ஏற்ற படிப்பு BBA Tourism.


Indian Institute of Tourism and Travel Management NOIDA( 20 kms from Delhi) & GWALIOR- MP ஆகிய 2 கல்லூரிகளில் BBA - Tourism and Travel Management படிக்கலாம்👍👍👍


IITTM யில் BBA Tourism படிக்கும் அரசுப் பள்ளி கண்மணிகள் 260 பேர்.👌👌👌👌👏👏👏👍👍👍👍💐💐💐💐


 *தேர்வு - 27 APU* - Azim Premji University யில் 4 வருட BA (Hons) BSC (Hons) படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு.


 Bengaluru and Bhopal ஆகிய 2 நகரங்களில் உள்ள APU பல்கலைக்கழகத்தில் படிக்க


நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.


வெற்றி பெறும் குழந்தைகள் 100% scholarship பெற்று APU வில் படிக்க முடியும். 👍👍👍


APU - Bengalore and Bhopal வளாகங்களில் 2025ல் இடம் பிடித்து சாதித்த அரசுப் பள்ளி சாதனையாளர்கள் 96 பேர்.👍👍👍👍👏👏👏👏💐💐💐💐


 * *மேற்காண் 27 தேர்வுகளை எழுதி நாட்டின் 217 முதன்மை கல்வி நிறுவனங்களில் Premier Institutes கல்லூரிகளில் இடம் பிடிக்கும் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு "நான் முதல்வன் திட்டம்" கை கொடுக்கும்** 💐💐💐💐💐


மேற்காண் 27 நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா ?


மேற்காண் 27 தேர்வுகளுக்கு Online Application செய்திட தயாராக வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்.👇👇


1. SSLC Mark Sheet

2. Aadhar Card (SSLC & ஆதார் இரண்டிலும் மாணவர் பெயர் & பிறந்த தேதி ஒரே மாதிரி இருப்பது மிக மிக முக்கியம்🛑🛑🛑) இரண்டும் ஒன்றாக இருந்தால் தான் APAAR ID or ABC ID Generate ஆகும்.

3. BC BCM MBC DNC மாணவ மாணவிகள் OBC - NCL சான்று வைத்திருக்க வேண்டும்.

4. OBC NCL சான்று இல்லாதவர்கள் உடனே இ-சேவை மையத்தில் விண்ணப் பிக்கவும்.

5. OBC NCL பெற தேவையான ஆவணங்கள் ரேசன் கார்டு & பெற்றோர் Income Certificate Below 8 Lakhs.

6. Income Certificate இல்லாதவர்கள் முதலில் Income Certificate க்கு இ - சேவை மையத்தில் விண்ணப் பிக்கவும்.

7. OTP பெற ஒரு Phone Number தேவை.

8. இரண்டு email id Create செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

9. சாதிச்சான்று இல்லாத முற்பட்ட வகுப்பு அரசுப் பள்ளி குழந்தைகள் மட்டும் General -OC - EWS சான்றுக்கு விண்ணப் பிக்கவும்.

10. Your Photo

11. Your Signature


Application போட்டாச்சு. 👏👏👏


அடுத்து என்ன?


எப்படி தயாராவது?

என்ன படிப்பது?

என்ன Syllabus ?

Question Paper எப்படி வரும்?


போன்ற விபரங்களுக்கு உங்கள் பள்ளியின் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரை அணுகவும்.


மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் தமிழ்நாடு அரசின் கல்வித் துறை உதவி எண் 14417


 * *மிக* *முக்கிய** *குறிப்புகள்* 👇👇👇:

மேற்காண் 27 தேர்வுகளில் CLAT UCEED NID NIFT APU JEE January Session ஆகிய 6 தேர்வுகளும் +2 பொதுத் தேர்வுக்கு முன்பே முடிந்து விடும்.


NEET AIIMS NCET JEE NCHM JEE CUET IITTM ஆகிய 7 தேர்வுகளுக்கும் *மார்ச் - 10 தேதிக்

குள் விண்ணப்பிக்க வேண்டும்.* (பொதுத் தேர்வு நடைபெறும் நாள்களில் - கடைசி தேதி முடிந்து விடும். - கவனம்.🛑🛑🛑)



மீதமுள்ள கீழ்காண் 14 தேர்வுகளுக்கும் ... பொதுத் தேர்வு முடிந்த பிறகு April 2026 ல் விண்ணப்பங்கள் கோரப்பட்டு May 2026 ல் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ... June 2026 Result வெளியாகி .... July 2026ல் Counselling நடைபெற்று .... Admission முடிக்கப்பட்டு ... கல்லூரி வகுப்புகள் தொடங்கும்.👍👍👍


IMU CET

NATA

ISI

MSE

IPMAT - Indore - MBA

IPMAT - Rohtak - MBA

Wednesday, 22 October 2025

27 Exams -217 Colleges

 தமிழ்நாடு அரசின்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ்


தமிழ்நாட்டிற்கு வெளியில் பிற மாநிலங்களில் 


சென்று படிக்க விரும்பும்


தமிழ்நாட்டு அரசுப் பள்ளி +2 குழந்தைகளுக்கான


பிரமாண்ட உயர்கல்வி வாய்ப்புகள் 👇👇👇


*+2 கணிதப் பிரிவு குழந்தைகளுக்கு காத்திருக்கும் 9 தேர்வுகளும் 106 கல்லூரிகளும்👇👇👇* 


1. JEE - 90 colleges 

2. IMU -6 colleges 

3. NATA- Anna University 1

4. IPMAT Indore Amritsar 

5. IPMAT Rohtak 

6. NTA-JIPMAT Bodh Gaya 

7. ISI statistics 1 college 

8. MSE Economics 1 

9. NCET- B.Ed 3 colleges 

= 9 Exams 106 Colleges



 *+2 Biology பிரிவு குழந்தைகளுக்கு காத்திருக்கும் 8 தேர்வுகளும் 48 கல்லூரிகளும்👇👇👇* 


10. CUET-ICAR 9 colleges 

11. AllMS 26 colleges

12. JIPMER Pondicherry 1

 13. NIMHANS Bengaluru 1

 14. NISER Bhubaneswar +UoM DAE CEBS 2

15. IISER 7 colleges 

16. NEET- NIFTEM 1

17. BITS-SAT B.Pharm 1

= 8 Exams 48 colleges.


 *+2 படிக்கும் அனைத்து Group குழந்தைகளுக்காகவும் காத்திருக்கும் 10 போட்டி தேர்வுகளும் 63 கல்லூரிகளும்👇👇👇* 


18. CLAT 25 colleges

19. CUET-DU BHU JMI TISS

20. NFSU 7 colleges 

21. RIE Mysore CEE B.Ed 1

22. NID- DAT 5

23. NIFT 6

 24. IIT-UCEED 7

 25. NCHM-JEE 4

 26. IITTM 2 Noida & Gwalior 

27. APU 2 Bengaluru Bhopal 

= 10 Exams 63 colleges 


 *Grand total* 

 *27 Exams* 

 *217 Colleges*

Thursday, 25 September 2025

JEST – Joint Entrance Screening Test

JEST – Joint Entrance Screening Test


 JEST – அறிமுகம்


📌 JEST (Joint Entrance Screening Test) என்பது இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் Ph.D / Integrated Ph.D சேர்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு.


📌 இதை பல்வேறு Institute of National Importance மற்றும் Research Institutes (TIFR, IISc, IITs, IISERs, HRI, IMSc, PRL, IUCAA, SNBNCBS, RRI, Bose Institute, NCRA, VECC, ARIES போன்றவை) இணைந்து நடத்துகின்றன.


📌 JEST தேர்வு மதிப்பெண் 

இந்தியாவின் Physics, Theoretical Computer Science, Neuroscience, Computational Biology போன்ற புலங்களில் Ph.D / Integrated Ph.D சேர்க்கைக்கு பயன்படுத்தப்படுகிறது.



📚  JEST தேர்வு துறைகள் 


1️⃣ Physics

2️⃣ Theoretical Computer Science

3️⃣ Neuroscience

4️⃣ Computational Biology



📝  Eligibility


🎯 Ph.D (Physics): M.Sc (Physics / Applied Physics)

🎯 Ph.D (Theoretical CS): M.Sc / M.E. / M.Tech (Computer Science, AI, Data Science)

🎯 Ph.D (Neuroscience): M.Sc (Life Sciences / Physics / Math) / B.E. / B.Tech

🎯 Ph.D (Computational Biology): M.Sc (Physics / Chemistry / Biology / CS / Maths)


🎯 Integrated Ph.D: B.Sc (Physics / Maths / CS / Engineering Physics) → பின்பு JEST மூலம் தேர்ச்சி பெற்று ஆராய்ச்சி நிறுவனங்களில் சேரலாம்.



🔎 12th பிறகு எந்தக் கோர்ஸ் எடுத்தால் JEST வழி செல்லலாம்


👉 Step 1: 12th பிறகு UG


B.Sc Physics 🧲


B.Sc Mathematics ➗


B.Sc Computer Science 💻


B.Sc Life Sciences / Biology 🌿


B.Sc Chemistry ⚗️


B.E. / B.Tech (CSE / ECE / Physics / Biotechnology)



👉 Step 2: PG


M.Sc Physics / Maths / Computer Science / Life Sciences / Biology / Chemistry


M.Tech (Relevant specializations)



👉 Step 3: JEST Exam


M.Sc / PG இறுதி ஆண்டில் எழுதலாம்.


தேர்ச்சி பெற்றால் IISc, IITs, TIFR போன்ற Research Institutes-இல் Ph.D / Integrated Ph.D படிக்கலாம்.



🌟 Career Opportunities


✅ National Research Institutes (IISc, IITs, TIFR, IISERs)

✅ Scientist in ISRO, DRDO, BARC, PRL போன்றவை

✅ Post-Doctoral Research Abroad 🎓

✅ Professorships & Research Labs 🔬



“ஆராய்ச்சியே அறிவியலின் உயர்ந்த பாதை – JEST அதை நோக்கி பயணிப்பவர்களுக்குவாயில்.” 🚀


Monday, 15 September 2025

BITS Pilani – Birla Institute of Technology and Science


BITS Pilani 

– Birla Institute of Technology and Science



முழுப்பெயர்

Birla Institute of Technology and Science (BITS), Pilani

 இடம்: Pilani (Rajasthan) – முக்கிய வளாகம்

மற்ற வளாகங்கள்: Goa, Hyderabad, Dubai

நிறுவப்பட்டது: 1964 – Birla குடும்பத்தால் நிறுவப்பட்டது

அங்கீகாரம்: Institute of Eminence (IoE) – UGC, Government of India


சிறப்பு:

 இந்தியாவின் முன்னணி தனியார் உயர்கல்வி நிறுவனம் – Engineering, Science, Pharmacy, Management துறைகளில் தேசிய & உலகளாவிய தரம்



வழங்கப்படும் பாடத்திட்டங்கள்


🎓 UG Courses (12th பிறகு) 


1️⃣ B.E. (Honours) – Computer Science, Mechanical, Civil, EEE, ECE, Chemical, Biotechnology, Manufacturing

2️⃣ B.Pharm (Honours) – Pharmacy

3️⃣ B.Sc. (Honours) – Economics, Mathematics


🎓 PG Courses


M.E. (Engineering specializations)

M.Pharm

M.Sc. (Biological Sciences, Chemistry, Physics, Economics, Mathematics, Data Science)

MBA (Business Analytics, General Management)



🎓 Ph.D Programmes

Engineering, Science, Management, Pharmacy துறைகளில் Research


சேர்க்கை முறைகள்


UG Admissions → BITSAT (Birla Institute of Technology & Science Admission Test)


Eligibility: 12th with Physics, Chemistry, Mathematics / Biology, English


Cut-off: High percentile (தேர்வு மிகவும் போட்டி நிலை)



PG Admissions


M.E./M.Pharm → BITS HD Entrance Test / GATE / GPAT


MBA → CAT / XAT / GMAT / BITS Admission Test


Ph.D → Entrance Test + Interview



💼 வேலை வாய்ப்புகள்


🎯 Engineering Graduates → Software Engineer, Data Scientist, R&D Engineer, Core Engineering Jobs (Automobile, Civil, Electronics)


🎯 Pharmacy Graduates → Pharma Companies, Clinical Research, Drug Development


🎯 Science Graduates → Research Labs, Data Analytics, Economics Firms


🎯 Management Graduates → Consulting, Finance, Analytics, Entrepreneurship


👉 BITS Alumni → Microsoft, Google, ISRO, DRDO, TCS, Amazon போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.



🏢 முக்கியத்துவம் & அங்கீகாரம்


NIRF Ranking → எப்போதும் Top 20 (Engineering & Overall)


QS World Ranking-இல் இடம் பெற்ற ஒரே தனியார் Indian Institute (non-Government)


மாணவர்களுக்கு Practice School Programme (PS-I & PS-II) → Industry Internship & Placement integration


Research + International collaborations (MIT, Stanford, NTU Singapore)



🌐 இணையதளம்

🔗 www.bits-pilani.ac.in




Wednesday, 3 September 2025

University of Delhi (DU)

 


  University of Delhi (DU)

(டெல்லி பல்கலைக்கழகம்)


    நிறுவனம் அறிமுகம்


      நிறுவப்பட்டது: 1922

    வகை: Central University

 வளாகங்கள்: North Campus, South Campus


 அங்கீகாரம்: UGC | NAAC A+


  இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகம்


 மாணவர்கள்: சுமார் 7 லட்சம் (UG, PG, Ph.D. சேர்த்து)

வழங்கப்படும் பாடத்திட்டங்கள் 


 UG Courses (12th பிறகு)


1️⃣ B.A. (Hons) – Economics, Political Science, English, History

2️⃣ B.Com (Hons) / B.Com (Prog.)

3️⃣ B.Sc – Mathematics, Physics, Chemistry, Computer Science

4️⃣ Professional Courses – BMS, BBA(FIA), B.El.Ed., Journalism


PG Courses


M.A., M.Com., M.Sc. (பல துறைகளில்)

MBA (FMS – Faculty of Management Studies மூலம்)

LLB & LLM (Faculty of Law)


  Ph.D. Programmes


Arts, Science, Commerce, Management, Law, Education


 சிறப்பு


   இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற North Campus Colleges:


St. Stephen’s College

Hindu College

Miranda House

Hansraj College

SRCC (Shri Ram College of Commerce)

Research, Arts & Humanities, Commerce, Law, Science ஆகிய துறைகளில் இந்தியாவிலேயே முன்னணி தரம்.


 சேர்க்கை முறைகள்


 CUET (Common University Entrance Test) மூலம் UG / PG சேர்க்கை


    போட்டி கடுமையாக இருக்கும் → உயர் cut-off & merit அடிப்படையில் admissions


 வேலை வாய்ப்புகள் 


UPSC / SSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த தளம்


Corporate Placements – Finance, Consulting, IT, Media, Journalism


Acade

mic & Research வாய்ப்புகள்


🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்


🔗 www.du.ac.in