உங்களுக்குத் தெரியுமா? அரசுப்பள்ளிகளில் +2 முடித்துள்ள மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டல் தொடர் :
7.5 கோட்டா 20% PSTM கோட்டா எனக்கு கிடைக்குமா ? முதல் தலைமுறை பட்டதாரி சான்று நான் வாங்க வேண்டுமா? பதில்கள்
7.5% கோட்டா என்றால் என்ன?
அரசு பள்ளியில் 6-12 வகுப்பு படித்த குழந்தைகளுக்கு அனைத்து தொழில் படிப்புகளிலும் வழங்கப்படும் சிறப்பு ஒதுக்கீடு. 7.5% கோட்டாவில் இடம் பிடித்தால் கல்லூரி கட்டணம் & விடுதிக் கட்டணம் கிடையாது.
RTE Act 2009 மூலம் தனியார் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்பு படித்த குழந்தைகளுக்கு 7.5% கோட்டா கிடைக்குமா?
கிடைக்கும். ஆனால் 9, 10, 11, 12 வகுப்புகளை அரசுப்பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.
அரசுப்பள்ளியில் ஆங்கில வழியில் படித்தால் 7.5% கோட்டா உண்டா ? உண்டு.
BA BSC BCom BCA படிக்க 7.5% கோட்டா உண்டா ?
இல்லை. ஆனால் 7.5% கோட்டா குழந்தைளுக்கு புதுமைப்பெண் திட்டம் & தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 கிடைக்கும்.
7.5% கோட்டா எந்தெந்த படிப்புகளுக்கு உண்டு?
கீழ்காண் தொழில் படிப்புகளுக்கு மட்டும் 7.5% கோட்டா உண்டு.
MBBS BDS BSMS BUMS BAMS BHMS (NEET தேவை)
BE through TNEA Counselling.
B.V.Sc B.F.SC BSC (Agri) Hort. Forestry Sericulture BBA (Fishery Marketing)
B.Tech. Agri Engi / Bio Tech / Bio Informatics / Dairy Tech.
BA LLB (Hons) at SOEL
BBA LLB (Hons) at SOEL
BCom LLB (Hons) at SOEL
BCA LLB (Hons) at SOEL
BA LLB at Affiliated Law Colleges.
மொத்தம் எத்தனை பேருக்கு 7.5% கோட்டா Free Seats கிடைக்கும் ?
BE படிப்பில் Phy Che Maths அதிக மதிப்பெண் எடுக்கும் சுமார் 11000 பேருக்கு Free Seats கிடைக்கும்,
பிற எல்லா படிப்புகளையும் சேர்த்து சுமார் 1000 பேருக்கு Free Seats கிடைக்கும்.
BA BSC BCom BCA படிக்க முதல் தலைமுறை பட்டதாரி சான்று தேவையா ? தேவையில்லை.
எந்த படிப்புகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்று வாங்க வேண்டும் ?
MBBS BDS BE Agri BVSc BFSC B.Tech BA LLB போன்ற தொழில் படிப்புகளுக்கு இச்சான்று பயன்படும். அதுவும் 7.5 கோட்டாவில் சீட் கிடைத்தால் தேவையில்லை. SC ST SCA குழந்தைகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்று தேவையில்லை. 7.5% கோட்டா இல்லாத BC MBC BCM DNC குழந்தைகளுக்கு மட்டும் இச்சான்று பயன்படும்.
முதல் தலைமுறை பட்டதாரி சான்றின் பயன் என்ன?
உங்கள் கல்லூரி Tuition Fees ல் 50% ஐ அரசு செலுத்தும்.
PSTM - Persons Studied Under Tamil Medium கோட்டா என்றால் என்ன?
7.5% கோட்டா என்பது அரசுப் பள்ளியில் 6-12 வகுப்புகள் படித்த குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்படும் சலுகை.
PSTM கோட்டா என்பது 1-12 வகுப்புகள் அனைத்தையும் Tamil Medium வழியாகவும் தொடர்ந்து கல்லூரி பட்ட படிப்பையும் Tamil Medium வழியாகவும் படித்து முடிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் TNPSC TRB USRB வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் 20% சிறப்பு முன்னுரிமை. ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி டிகிரி வரை தமிழ் வழியில் படித்தால் விரைவில் அரசுப் பணியில் (Govt. Job) சேரலாம்.
மேலும் விபரங்களுக்கு
சுழற்றுக 14417
தமிழ்நாடு அரசின்
பள்ளிக் கல்வித்துறை உயர்கல்வி வழிகாட்டு உதவி எண் : 14417
மேலும் அதிக விபரங்களுக்கு மணற்கேணியில் சொடுக்கவும்
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis
No comments:
Post a Comment