Wednesday, 17 April 2024

https://naanmudhalvan.tnschools.gov.in/ 

 +2 தேர்வு முடித்து கல்லூரி கனவுகளுடன் காத்திருக்கும் குழந்தைகளுக்கான பதிவு. 
 எங்கே படிப்பது ?
 என்ன படிப்பது ? 
என்ற குழப்பம் வேண்டாம்.
 உங்களுக்கு உதவ காத்திருக்கிறது "நான் முதல்வன்" இணைய தளம். 6 முதல் 12 வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்தீர்களா ?

 நீங்கள் BE BL BVSc BFSc B.Sc Agri MBBS BDS போன்ற தொழில் படிப்புகள் படிக்க 7.5% விழுக்காடு இடங்கள் அரசால் ஒதுக்கப்படுகின்றன.
 இந்த இடங்களை Counselling க்கு விண்ணப்பித்தால் மட்டுமே பெற முடியும்.
 No College Fees No Hostel Fees. ஆனால் நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல Cut off தேவை. 
 தமிழ் ஆங்கிலம் தவிர பிற 4 பாடங்களின் மதிப்பெண்களை கூட்டினால் 380 மதிப்பெண்கள் கிடைக்குமா ? 
 அவ்வாறு 380 மார்க் கிடைத்தால் சென்னை தகைசால் சட்டப்பள்ளி (School of Excellence in Law - SOEL) கல்லூரி & விடுதி கட்டணமின்றி 5 ஆண்டுகள் சட்டம் படிக்கலாம். 
 உங்களின் Phy Che Maths ஆகிய ஒவ்வொரு பாடத்திலும் 70 மதிப்பெண்களுக்கு மேல் கிடைத்து விடுமா ? 
 அப்படி எனில் 7.5% விழுக்காடு ஒதுக்கீட்டில் எந்த கட்டணமும் இல்லாமல் BE படிக்கலாம். கால்நடை மருத்துவ படிப்பு BVSc படிக்க Phy Che Bio ஒவ்வொரு பாடத்திலும் 97 or 98 மதிப்பெண்கள் தேவை.
 இதை விட குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் கவலை வேண்டாம். கீழ்காண் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்து எழுதுங்கள்.
 அருமையான மத்திய அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கால அவகாசம் முடிந்து விட்ட தேர்வுகள்
 👇👇👇 JEE NEET AIIMS Nursing CLAT UCEED NIFT NID NCHM JEE CUET ISI 
 இன்னும் கால அவகாசம் உள்ள தேர்வுகள் 👇👇👇 14.4.24 CMI Pre Last Date 15.4.24 CMI Last Date 19.4.24 FDDI Pre Last Date 20.4.24 FDDI Last Date 23.4.24 JIPMAT Pre Last Date 24.4.24 JIPMAT Last Date 25.4.24 JEE Mains Result மே 4 IMU CET B.Tech & B.Sc Nautical science Pre last date மே 5 IMU CET Last Date மே 5 ஞாயிறு NEET தேர்வு 2 PM மே 6 திங்கள் + 2 Result வெளியீடு மே 9 NFSU Pre Last Date மே 10 NFSU Last Date மே 10 வெள்ளி SSLC Result வெளியீடு மே 11 NCHM JEE தேர்வு மே 12 FDDI & ISI தேர்வு IISER IAT Pre Last Date மே 13 IISER Last Date மே 14 செவ்வாய் + 1 Results வெளியீடு மே 15 - 31 CUET தேர்வு. மே 26 JEE Advanced தேர்வு மே 30 NISER Pre Last Date மே 31 NISER Last Date மே 31 FDDI Result ஜூன் 1 NATA Exam ஒவ்வொரு சனி ஞாயிறும் நடைபெறும். வருடத்திற்கு 3 முறை எழுதலாம். தேர்வுத் தேதியை நாமே தேர்ந்தெடுக்கலாம். +1 Maths மாணவர்களும் எழுதலாம். ஜூன் 6 JIPMAT தேர்வு. ஜூன் 8 IMU -CET & AIIMS Nursing தேர்வுகள் ஜூன் 9 IISER IAT தேர்வு & JEE Advanced Result ஜூன் 10 JossA கலந்தாய்வு Registration தொடக்கம். ஜூன் 14 NEET Result ஜூன் 15 NFSU Exam ஜுன் 19 IMU -CET Result ஜூன் 22 AIIMS Paramedical Exam ஜூன் 24 NFSU Result ஜூன் 30 CUET Result. NISER NEST Exam ஆகஸ்டு 1 IMU வகுப்புகள் தொடக்கம். மேலே உள்ள அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பம் செய்து முயற்சி செய்து பாருங்கள். மேற்காண் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பம் செய்வது எப்படி? தேர்வுக்கு தயார் ஆவது எப்பது ? என்ன Syllabus ? எப்படி கேள்விகள் வரும் ? அந்த கல்லூரி எப்படி இருக்கும் ? என உங்களின் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் "நான் முதல்வன்" தளத்தில் விளக்கமான வீடியோக்கள் உள்ளன. பார்த்து பயனடையுங்கள். தற்போது +2 படித்து முடித்து கல்லூரியில் சேர காத்திருக்கும் குழந்தைகள் நண்பர்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment